A very basic Superfish menu example
A TO Z IN KIDNEY CENTRE
OUR SERVICES
HOME
ABOUT US
TRANSPLANTATION
UROLOGY SURGERIES
OP SERVICE
IP SERVICE
LABORATORY
VIDEO
PROTECT YOUR KIDNEYS
KIDNEY DISEASE
சிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்
சிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்'
PREVIOUS NEWS

LATEST NEWS

LIFE TIME ACHIEVEMENT
மருத்துவத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்
READ MORE..
சிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்' மருத்துவ வழிமுறைகள்

Dr.M.சிவக்குமார், M.D., D.M.,(NEPHRO)
சிறுநீரகவியல் மருத்துவர்
மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையம்
6/6 B-2, சிவகங்கை ரோடு,
மதுரை - 625020.
போன் : 0452-2584397/ 2584566/ 4392267 பேக்ஸ் : 91-(0)452-4393367
மின்னஞ்சல் : nephshiva@gmail.com, maduraikidneycentre@gmail.com

சிறுநீரக நோய் என்பது (Chronic Kidney Disease – CKD) சிறுநீரகம் சரிவர இயங்காமல் சிறுநீரில் புரதம் வெளியேறுவதோ அல்ல்து இரத்தத்தில் கழிவு உப்புக்கள் (Urea, Creatinine) அதிகரித்தலையோ குறிக்கும்.

இந்த பதினைந்து ஆண்டுகளில் சிறுநீரக நோய்கள் இந்தியாவில் இரு மடங்காக பெருகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 1/2 லட்சம் புதிய சிறுநீரக நோய் உள்ளவர்கள். இரத்த சுத்திகரித்தல் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய முற்றிய நிலையில் மருத்துவமனையை அணுகுகின்றனர்.

சர்க்கரை நோய் (29.7%), சிறுநீரக அழற்சி (Gலொமெருலொ ணெப்ஹ்ரிடிச்) (19.3%), உயர் இரத்த அழுத்தம் (16%), ஆகிய நோய்கள் தான் இந்த சிறுநீரக செயல் இழப்பு நோய்க்கு முக்கிய காரணிகள் ஆகின்றன.

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக நோய்க்கான வாய்ப்பு உள்ளது.

துரதிஷ்டவசமாக பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்தில் கண்டறிய வாய்ப்பு இல்லாமல் நோய் முற்றிய நிலைமையில் மருத்துவரை அணுகுகின்றனர்.

   

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்நோய் உடையவர்களில் பெரும்பாலானோர் முற்றிலும் சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே இருதய நோய், வாத நோய் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Step 1 - நோய் முதல் நாடி - யார், யாருக்கு சிறுநீரக நோய் ஏற்பட வாய்ப்புள்ளது?

சர்க்கரை, இரத்த அழுத்தம், குடும்பத்தில் சிறுநீரக நோய், அதிக உடல் பருமன், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் - இவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்கள் சிறுநீரக நோய்க்குண்டான பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஆரம்ப கட்டத்தில் இந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் பெரிதாக தெரிவதில்லை. அதனால் தான் இது 'ஒரு மவுன நோய்' என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு கை, கால்களில் வீங்குவது, இரவு நேரத்தில் அதிக முறை சிறுநீர் கழிப்பது, அடிக்கடி வாந்தி, மயக்கம், உடம்பு சோர்வு, தளர்ச்சி, அரிப்பு ஏற்படுவது மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கனவே அவர்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி, உட்கொள்ளும் மாத்திரைகளின் தேவை குறைவது போன்றவைகள் அறிகுறிகளாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் சாதாரண பரிசோதனைகளான (1) இரத்த அழுத்தம் (2) சிறுநீர் ஆய்வு (3) இரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாட்டினின் ஆய்வு போன்றவைகளை செய்தால் போதுமானது.

Step 2 – நோய் நாடி :

இப்படி புதிதாக கண்டறியப்படும் சிறுநீரக நோயாளிகள் மனத்தளர்ச்சி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இன்று உள்ள சிறப்பான மருத்துவ முறைகளால் சிறுநீரக நோய்களை பலப்பல ஆண்டுகள் கட்டுப்படுத்த வழிமுறைகள் உள்ளன. ஆனால் முக்கியமான ஒன்று. நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் வைத்திய முறைகளை மேற்கொள்வேன் என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற சிறு சிறு வாழ்க்கை முறைகளை கடைபிடித்து தங்களை ஒரு 'Self Manager' ஆக உருவாக்கிக் கொண்டால் சாதாரண செலவு குறைந்த மாத்திரைகளாலே பல ஆண்டுகள் வாழ வாய்ப்புகள் உள்ளன. மேலும் வலி மாத்திரை மற்றும் புற மாத்திரகள் உட்கொள்வதை அறவே ஒழித்துக் கொள்ளவேண்டும்.

Step – 3 – முற்றிய சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு

இரத்த சுத்திகரிப்பு, வயிற்றுச் சவ்வு சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றால் இவர்களை பல ஆண்டுகள் வாழ வைக்கலாம். இவற்றுள் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை என்பது சிற்ந்த ஒன்றாகும். துரதிஷ்டவசமாக இந்தியாவில் இந்நோய் உடையவர்களில் 5-லிருந்து 7 சதவீதம் பேர்தான் மேற்கண்ட வழிகளில் ஒன்றால் தங்களை கவனிக்க முடிகிறது. நம்புங்கள்... இவற்றை எல்லாம் மீறி நம் நாடு தான் அமெரிக்கவிற்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நாடாகும்.

இந்த வருட சிறுநீரக நோய் தினத்தின் செய்தி என்னவென்றால் 'சிறுநீரக தானம் - சிறுநீரக நோயாளிக்கு மறுவாழ்வு (Dஒனடெ Kஇட்னெய்ச் fஒர் ளிfஎ றெcஎஇவெ)'. இந்த வரிகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, முக்கியமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு செய்யும் பட்சத்தில் இந்த நோயை வெல்லும் கனவு நனவாகிறது. நமது பாரம்பரிய குடும்ப அமைப்பால், மேற்கத்திய நாடுகளை விட சிறுநீரக தானம் என்பது, நமது நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு சாத்தியமான ஒன்று. ஏனென்றால் மேலும் மூளை சாவு ஏற்பட்டவர்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வரும் பட்சத்தில் இந்நோய் உள்ளவர்கள், புது வாழு பெறுவதோடு நமது நாடும், சமுதாயமும் சிறுநீரக தானத்தில் முதலிடத்தை அடையும்.

 
developed by Maduraisoft